தமிழக அரசு மீது தலைமை நீதிபதி புகார்
சென்னை:
உயர் நீதிமன்றம் அனுப்பிவைக்கும் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றுதில் தமிழக அரசு அக்கறைகாட்டுவதில்லை என்று தலைமை நீதிபதி மாாக்கண்டேய கட்ஜூ புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள, கட்ஜூ தனக்கு உயர்நீதிமன்றவக்கீல்கள் நடத்திய பிரிவு உபசார விழாவில் பேசியதாவது:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் மருத்துவ சலுகைகள் கிடைப்பதுகடினமாக உள்ளது. தமிழகத்தில் நீதிபதிகளுக்கு மருத்துவ சலுகைகள் வழங்குவதில் உள்ள குறைபாடுகளைதவிர்க்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டால் அது நேரடியாக முதல்வரை சென்றடையவேண்டும். இதைத் தவிர்த்து செயலர், துணை செயலர் என்று ஒவ்வொரு மேஜையிலும் வைக்கப்பட்டு கடைசியாகமுதல்வருக்கு அனுப்பும் முறை சரியானதல்ல.
நான் முதல்வரை குற்றம் கூறவில்லை. இது அரசின் பெரிய குறைபாடாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு என்று தனியாக ஒரு விருந்தினர் மாளிகை இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இருந்துவரும் நீதிபதிகள் தங்க, வசதியாக ஒரு விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும்.
தலைமை நீதிபதி அனுப்பி வைக்கும் பரிந்துரைகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இருந்துபல கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
நான் எனது தனிப்பட்ட வசதிக்காக எதையும் கேட்கவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications