காஷ்மீரில் 320 பேர் பலி: டெல்லி, பஞ்சாபில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
வட இந்தியாவைக் குலுக்கிய பயங்கர நிலநடுக்கத்துக்கு காஷ்மீரில் 320 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2 பேர்உயிரிழந்துள்ளனர், பஞ்சாபிலும் 2 பேர் இறந்தனர்.
ஜம்மூ-காஷ்மீரில் பல கிராமங்கள் இருந்த அடையாளம் இல்லாத அளவுக்கு அழிந்து போய்விட்டன. ஆயிரக்கணக்கானகட்டடங்கள் இடிந்ததில் 320 பேர் பலியாயினர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஆவர்.குப்வாரா மாவட்டத்தில் 157 பேரும், பாரமுல்லாவில் 139 பேரும், ஜம்மூவில் 18 பேரும் பலியாகியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் தியோலி கிராமத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். அதே பகுதியில் ஒருசுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். இதே போல பஞ்சாபிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையும் காஷ்மீரில் சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதையடுத்து மக்கள் அலறியபடி வீடுகளைவிட்டு ஓடி வந்தனர்.
காஷ்மீரில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராணுவம் அதற்கு ஆபரேசன் இமாத் என பெயரிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications