கண்மாய்களில் நீர் மட்டம் திடீர் உயர்வு: பூகம்பத்தின்போது நாகையில் பரவிய சுனாமி பீதி
பொறையார்:
வட இந்தியாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது நாகப்பட்டிணத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்மாய்கள்,ஊரணிகளில் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது. மேலும் வெந்நீர் போல நீர் கொப்பளித்ததால் அப் பகுதிகளில் சுனாமி பீதி பரவியது.
நேற்று வட இந்தியாவை உலுக்கிய மாபெரும் நில நடுக்கத்தின் காரணாகவே இந்த நிலவியல் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.கடந்த ஒரு வாரமாக சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் நீர் மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து வரும்நிலையில், நாகப்பட்டிணத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை மாற்றத்தால் சுனாமி பயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல பகுதிகளிலும் கடல் நீர் மீனவர் குப்பங்களுக்குள் புகுந்து வருகிறது. பயங்கர சீற்றத்துடன்பாயும் அலைகள் தடுப்பு சுவர்களையும் தாண்டி வீடுகளுக்குள் புகுந்து வருவதால் வட சென்னையில் பல மீனவர் குப்பங்கள்காலி செய்யப்பட்டுள்ளன.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல கன்னியாகுமரி உள்பட தென் பகுதிகளிலும் கடலில்அலைகள் மிகவும் சீற்றத்துடன் உள்ளன. இதனால் கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கும் பலஇடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
திடீரென கடலின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அப் பகுதியில் அச்சம் நிலவுகிறது.
இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கண்மாய்களில் நீர் மட்டம் திடீரெனஉயர்ந்தது. வெந்நீர் கொதிப்பது போல கண்மாய்களில் கொப்பளிப்பு ஏற்பட்டது.
வட இந்தியாவில் நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில், காலை 11 மணியளவில், இந்த கொப்பளிப்பு ஆரம்பித்தது. நீர்மட்டமும் வெகு வேகமாக உயர்ந்தது. இதனால் சுனாமி தாக்குதல் ஏற்படுமோ என அஞ்சிய மக்கள் கடல் பகுதிகளை விட்டுஓடினர்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கொப்பளிப்பு பின்னரே அடங்கியது. சுனாமி ஏற்படாது என்பதை மக்களுக்கு புரிய வைக்கவும்,அவர்களது அச்சத்தைப் போக்கவும் நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதிகளுக்கு நேரில்சென்றார்.
வட இந்திய நில நடுக்கததால் தான் இது ஏற்பட்டுள்ளதாக மக்களுக்கு விளக்கிய ராதாகிருஷ்ணன், மீனவர்கள் ஒரு நாள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.
ஆனாலும் அப் பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications