விஜய்காந்த் கட்சி பொதுச் செயலாளருக்கு அடி, உதை
சென்னை:
விஜய்காந்த் கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தனை நெல்லை மாவட்ட நிர்வாகிகள் அடித்து, உதைத்தனர்.
விஜய்காந்த் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் ராமு வசந்தன். கட்சி தொடங்கிய விஜய்காந்த், ராமு வசந்தனை அதன் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். ஆனால், ரசிகர் மன்றத் தலைவராக இருந்தபோதே காசு வாங்கிக் கொண்டே பதவிகள் தருவார்என்று ராமு மீது புகார் இருந்து வந்தது.இந் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற புதிய பந்தாவுடன் நடமாட ஆரம்பித்துள்ளார் ராமு வசந்தன்.
இந் நிலையில் விஜய்காந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து புகார்களின் அடிப்படையில் நீக்கப்பட்ட ரமேஷ் என்பவருக்கு விஜய்காந்த்கட்சியில் நெல்லை மாவட்டத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.
புகார்கள் காரணமாக மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவருக்கு கட்சியில் மாவட்டத் தலைவர் பதவி தரப்பட்டதை ஜீரணிக்கமுடியாத, வள்ளியூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரும் விஜய்காந்த் கட்சியின் நெல்லை மாவட்டப் பொறுப்பாளருமானராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்தார்.
ராமு வசந்தனை சந்தித்து, பல புகார்களுக்கு உள்ளான ரமேசுக்கு ஏன் மாவட்டத் தலைவர் பதவி தந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது, நான் தான் கட்சிக்குப் பொதுச் செயலாளர், நான் யாருக்கு வேண்டுமானாலும் பதவி தருவேன் என்று ராமு வசந்தன்மண்டைக் கணத்துடன் கூற அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கடுப்பான ராமச்சந்திரனின் ஆட்கள், ராமு வசந்தனை சட்டையைப்பிடித்து இழுத்து அறை விட்டனர். அத்தோடு அடித்தும் உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்ற ராமச்சந்திரனை விருகம்பாக்கம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.பன்னீர் என்பவரை மிரட்டி மொபட் பறிக்க முயன்றதாக அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
ராமு வசந்தன் மற்றும் விஜய்காந்த் தரப்பின் தூண்டுதல் காரணமாகவே ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப் போட்டுள்ளதாகராமச்சந்திரன் தரப்பினர் கூறுகின்றனர்.
இதே ரீதியில் போனால் கட்சி உருப்படும்..












Click it and Unblock the Notifications