Australian team meets Jayalalitha
சென்னை:
மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜெப் கேலாப் தலைமையிலான 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுமுதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்தது.
குழுவினரிடம் ஜெயலலிதா பேசுகையில்,
இந்தியாவில் உற்பத்தி துறையில் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வருவதாகவும் வெளிநாட்டு முதலீடுகளைஈர்ப்பதில் முன்னணியில் திகழ்கிறது என்றார். தொழில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தில் ஏற்ற சூழ்நிலைகள்உள்ளதாவும் தெரிவித்தார்.
கடந்த 2004-2005ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து செய்யப்பட்ட மென்பொருள் ஏற்றுமதி ரூ. 10,700 கோடியைஎட்டியுள்ளது என்று சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, எண்ணூர் துறைமுகத்தில் அமைக்கவுள்ள எல்.என்.ஜி.டெர்மினல் திட்டத்தில் மின் உற்பத்தி செய்ய ஆஸ்திரேலியா கியாஸ் சப்ளை செய்யும் நிலையம் அமைக்கலாம்என்று யோசனை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பொருளாதாரம், விவசாயம், கல்வி, சுற்றுலா, சுரங்கம், கனிம வளம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில்இருநாட்டு ஒத்துழைப்புக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக மேற்கு ஆஸ்திரேலிய தலைவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications