கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது: போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமெரிக்க டாலர்கள், 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டகும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இக் கும்பல் கன்னியாகுமரி, கேரளா எல்லையில் குலசேகரம் என்ற இடத்தில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்சில்இந்த கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு வந்தன.இது பற்றி தகவலறிந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து ஒரு வாலிபரைக் கைது செய்தனர். மேலும்அங்கிருந்து 83 கள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள், ரூ. 5 லட்சம் மதிப்புடையகம்ப்யூட்டர்கள் அச்சடிக்கும் சாதனங்களை கைப்பற்றப்பட்டன.
அந்த வாலிபர் போலீசாரிடம் தந்த தகவலின் அடிப்படையில் கள்ள நோட்டு பிரஸ்ஸின் உரிமையாளர் உள்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications