மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 150 பக்தர்கள்: தீயணைப்புப் படையினர் மீட்டனர்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் அருகே சதுரகிரி மலைப் பகுதியில் உள்ள வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 150க்கும் மேற்பட்ட பக்தர்களைதீயணைப்புப் படையினரும் போலீசாரும் மீட்டனர்.
இந்த மலைப் பகுதியில் தனிப்பாறை சுந்தர மகாலிங்கம் ஆலயம் உள்ளது. இப் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழைபெய்து வருகிறது.இந் நிலையில் நேற்றிரவு இந்தக் கோவிலுக்குச் சென்ற சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். மலையில்இவர்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதையடுத்து செய்வதறியாது திகைத்த இவர்களில் சிலர் செல்போன் மூலம்போலீசாரைத் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து போலீசாரும் தீயணைப்புப் படையிரும் மலைக்கு விரைந்து இவர்களை பெரும் சிரமத்துக்குப் பின் மீட்டனர்.
30 ஆண்டுகளுக்கு முன் இந்த மலைக்குச் சென்ற பல பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications