காவல் துறையில் பெண்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: கலாம் யோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
போலீஸ் துறையில் பெண்களுக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு வழங்கலாம் என்று அப்துல் கலாம் யோசனைதெரிவித்தார்.
டெல்லியில் நடந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு குறித்த 3 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவதுநாட்டின் வளர்ச்சிக்கு அமைதியும், பாதுகாப்பும் முக்கியமானது ஆகும். போலீசார் சட்டம் ஒழுங்கை நிர்வகித்துஅமைதியை வழங்குகின்றனர். போலீசார் நட்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.
போலீசாருக்கு பயிற்சியின் மூலம் தலைமை பண்பு, தொழில் நுட்ப திறமை ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.பொது மக்களை நண்பர்களை போல நடத்த வேண்டும்.
பெண்களும், ஆண்களுக்கு சமமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் போலீஸ் துறையில் பெண்களுக்கு 10சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications