காஷ்மீரில் பலி 755 ஆக உயர்வு
ஊரி:
காஷ்மீரில் நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 755 ஆக உயர்ந்துள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் 469 பேரும் குப்வாரா மாவட்டத்தில் 259 பேரும் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.ராணுவத்துடன் விமானப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டுள்னர். பலியானவர்களில் 50 பேர்ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினராவர்.
இதற்கிடையே நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் நாளை பார்வையிடவுள்ளார். நேற்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்துக்கும் ஸ்ரீநகருக்கும்இடையிலான பஸ் போக்குவரத்து சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இரு நகர்களுக்கு இடையிலானநெடுஞ்சாலையில் நில நடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications