வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாடுமுழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும்மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை இலாகா அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கிபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்திற்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதிக்குள் தொடங்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications