பூம்புகாரில் நில அதிர்வு, கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவெண்காடு:
நாகை மாவட்டம் பூம்புகாரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.மேலும் இதன் கடலோர பகுதிகளில் கடல் சீற்றமும் ஏற்பட்டது.
பூம்புகார், கீழமூவற்கரை, திருமுல்லைவாசல் மற்றும் தரங்கம் பாடி பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாகஇருந்தது.சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.இந்த நிலையில் பூம்புகார் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததது. மழை விட்ட சில நிமிடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து சீர்காழி தாசில்தார் கந்தசாமி அந்த பகுதிக்கு சென்று வீடுகளை பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications