மேட்டூர் நீதிமன்றத்தில் கர்நாடக போலீஸ் துப்பாக்கி சூடு
மேட்டூர்:
மேட்டூர் நீதிமன்ற வளாகத்தில் கர்நாடக போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ரபீக். இவர் மீது அங்கு 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தமிழகத்திலும் இவர் மீதுபல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.இந் நிலையில் ரபீக் மீதான வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ரபீக், மேட்டூர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
அப்போது ரபீக்குடன் கர்நாடகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள திவான் அலி உள்ளிட்டோரும்கோர்ட்டுக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூர் போலீஸார் இன்ஸ்பெக்டர் நஞ்சே கெளடா தலைமையில் மேட்டூர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடி திவான் அலி உள்ளிட்ட 5 பேர் (அனைவர் மீதும் தலா 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்உள்ளதாம்) மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த இன்ஸ்பெக்டர் நஞ்சே கெளடா, அவர்களைப் பிடிக்கமுயன்றார்.
தனது துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டியபடியே பிடிக்க முயன்றார். அவருடன் வந்த பிற போலீசாரும் துப்பாக்கியைத்தூக்கினர்.
இதைப் பார்த்த திவான் அலியும் அவனது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதைத் தொடர்ந்து நஞ்சே கெளடா தனது துப்பாக்கியால் வானை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். நீதிமன்ற வளாகத்துக்குள்போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பீதி பரவியது. நீதிமன்றத்தில் இருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் சிதறி ஓடினர்.
பெங்களூர் போலீஸார் விரட்டிச் சென்று திவான் அலி உள்ளிட்ட 5 பேரையும் வளைத்துப் பிடித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications