ஜெயலலிதாவுக்கு அமைதி விருது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்திய கிறிஸ்தவ சர்வதேச காங்கிரஸ் என்ற அமைப்பு அமைதி விருதுவழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கிறிஸ்தவ சர்வதேசகாங்கிரஸ் என்ற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில்முதல்வரின் அறையில் நடந்தது.இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களின் தேசிய கவுன்சில் தலைவரான நெல்லையைச் சேர்ந்த பால் டேவிட் இந்தவிருதை முதல்வரிடம் வழங்கினார். இதில் அமெரிக்க அமைப்பைச் சேர்ந்த பெண் பாதிரியார் பிரசன்ன குமாரி,உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் விஜய பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின், மழை நீர் சேகரிப்புத் திட்டம், சுனாமி மறு சீரமைப்பு நடவடிக்கைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைகள்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் சிறப்பினை ஆராய்ந்து அவற்றின் மூலம் தமிழகத்தில்மறுமலர்ச்சியை ஏற்படுத்தியமைக்காக பாராட்டி, இந்த அமைதி விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விஜய பிரபாகர் தான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டுவதாக முன்புடுபாக்கூர் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications