மெரீனா குடிகாரர்கள்: பாதுகாப்பு பணியில் தனிப் படைகள்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களைப் பிடிக்க தனி போலீஸ் படைகள்அமைக்கப்பட்டு அவர்கள் கடற்கரையில் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகின் 2வது அழகிய கடற்கரை என்று பெயர் பெற்றுள்ள மெரீனா கடற்கரை, தனது பெயருக்கேற்ப அழகாகஇல்லாமல் இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தற்போது கடற்கரை எழிலுற திகழ்கிறது.பூங்காக்கள் அமைக்கப்பட்டும், கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டும் மெரீனா வெள்ளை வெளேரெனகாணப்படுகிறது.இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் விளக்கொளி இல்லாத பகுதிகளில் பலர் குடித்து விட்டு கடற்கரைக்குவருவோரிடம் கலாட்டா செய்து ரகளையில் ஈடுபடுவதாக போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடற்கரை மணலில் அமர்ந்து குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களைப் பிடிக்க போலீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படையிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் 43 காவலர்கள் இருப்பார்கள். மயிலாப்பூர் துணை ஆணையர்கலியமூர்த்தியின் நேரடிக் கண்காணிப்பில் இந்தப் படைகள் இயங்கும்.
இந்தப் படையினர் தீவிரக் கண்காணிப்பால் கடற்கரையில் அமர்ந்து குடிப்பது, பெண்களைக் கேலி செய்வது,வாகனத் திருட்டில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications