நடுரோட்டில் பூசணிக்காய் உடைக்க போலீஸ் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சாலைகள், நடுத் தெருக்கள், தெரு சந்திப்புகளில்பூசணிக்காய்களை உடைப்பதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வணிக நிறுவனங்கள், கடைகள்உள்ளிட்டவற்றில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். பூஜைக்குப் பின்னர் சாலையிலும், தெரு முனைகளிலும்,வீட்டு முன்பாகவும் பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள்வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே இரு சக்கர வாகனதாரிகள், நடந்து செல்லும் முதியவர்கள், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டுநடுத் தெரு, சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக, வீட்டு வளாகத்திற்குள்ளோ அல்லது வணிக நிறுவனங்களின் வளாகத்தினுள்ளோ பூசணிக்காயை உடைக்கவேண்டும்.

இதை மீறி யாராவது ரோட்டில் வந்து பூசணிக்காய் உடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறியுள்ளார் நடராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+