திருச்சியில் எம்.ஜி.ஆர். கழக 11வது ஆண்டு விழா
சென்னை:
ஆர்.எம். வீரப்பன் நடத்தி வரும் எம்.ஜி.ஆர். கழக கட்சியின் 11வது ஆண்டு விழா திருச்சியில் வரும் 17ம் தேதிகொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக ஆர்.எம்.வீ. வெளியிட்டுள்ள அறிக்கையில்:1995ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்.ஜி.ஆர். கழகம் உருவான தினம். இதையொட்டி 11வது ஆண்டுவிழாவும், பொதுக் குழுக் கூட்டமும் வருகிற 17ம் தேதி திருச்சி அரிஸ்டோ டைமண்ட் மஹாலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு 11வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), எல்.கணேசன்(மதிமுக), ஜி.கே.மணி (பாமக), கே.என்.நேரு (திமுக), வரதராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), தா.பாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்), ராஜ கண்ணப்பன் (மக்கள் தமிழ் தேசம்), காதர் மொஹைதீன் (முஸ்லீம் லீக்), டாக்டர்சேதுராமன் (மூவேந்தர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
கடந்த 10 வருடமாக எம்.ஜி.ஆர் கழகம் சிறப்புற செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியல் அரங்கில் இது ஒருசிறிய இயக்கமாக கருதப்பட்டாலும், கட்டுக் கோப்பான வலுவுள்ள இயக்கமாக இருந்து வருகிறது.
அரசியலில் என்ன லாபம் கிடைக்கும் என்று எண்ணாமல், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications