டி.வி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் கைது
சென்னை:
சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை இன்டர்நெட்டில் திருடி விற்றதாக அந்தநிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள் தயாரிப்பில் பிரபலமான டி.வி.எஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும்தொழில்நுட்ப ரகசியங்களை திருடி விற்று, நிறுவனத்தை வீழ்த்துவதற்கான சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்து,சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்த யாதவமூர்த்தி (வயது 52), ஜம்ஷெட்பூர்கிளை மேனேஜராக பணிபுரிந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் சேர்ந்து டி.வி.எஸ். நிறுவனத்தின் போட்டி நிறுவனமானஸ்டெர்லிங் டூல்ஸ் நிறுவனத்துக்கு டி.வி.எஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை இன்டெர்நெட்டில் திருடிவிற்றுள்ளனர்.
தற்போது யாதவ மூர்த்தி, ஸ்டெர்லிங் டூல்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார். ஸ்ரீராம்,விசாகப்பட்டனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுடி.வி.எஸ். நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தது.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜ், மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த பொலீஸ் தனிப்படை, யாதவமூர்த்தி மற்றும் ஸ்ரீராம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடிசோதனை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து டி.வி.எஸ். நிறுவனத்தின் டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினர்.இதை தொடர்ந்து பொலீசார் இந்த இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பிறகு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்ததற்காக சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர்பாலுவையும் ஆணையர் நட்ராஜ் பாராட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications