ஹைதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் பலி
ஹைதராபாத்:
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள்.
பேகம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மர்ம பையுடன் வந்த ஒரு ஆசாமி, அங்குபணியில் இருந்த போலீஸ்காரருடன் சற்று நேரம் பேசிகொண்டு இருந்தார்.சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்த ஜெலடின் வெடிகுண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில்பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெடிகுண்டு விபத்தால் அலுவலகத்தின் ஆஸ்பஸ்டாஸ் கூரை மற்றும் நாற்காலிகளும் சேதமடைந்துள்ளன.உயிரிழந்த 2 காவலர்களில் ஒருவர் போலீஸ் தலைமை காவலர் சத்தியநாராயணா, மற்றொருவர் ஹோம் கார்டுஎன்றும் தெரியவந்துள்ளது.
ஒரு அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாகவும், அது ஒரு வேளை தற்கொலை படையை சேர்ந்தமனிதவெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறை இயக்குநர் சுவர்ணஜித் சென், முதலில் அடையாளம் தெரியாத அந்தநபர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டால் தான் எந்த முடிவுக்கும் வர முடியும் என்றார்.
இந்த சம்பவத்தால் ஹைதராபாத் நகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புபகுதியின் அருகில் தான் ஆந்திர முதலவர் வீடு, அமெரிக்க தூதரகம் ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications