தடை செய்யப்பட்ட அமைப்பிடம் விருது பெற்ற ஜெ: சு.சுவாமி புது குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

நடிகர் விஜயகாந்திடம் தெளிவான அரசியல் கொள்கை இல்லை. எனவே அவருக்கு அரசியலில் பெரிய அளவில்எதிர்காலம் இருக்காது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளரக்ளிடம் அவர் பேசுகையில்,

விஜயகாந்த் ஒரு சாதாரண நடிகர். அவ்வளவுதான், அவருக்கு அரசியலில் பெரிய அளவில் ஞானமோ, தெளிவோஇல்லை. அவரது அரசியல் கொள்கை என்னவென்றே புரியவில்லை. எல்லா மொழிகளையும் படியுங்கள்என்கிறார்.

அப்படியானால், சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றையும் படியுங்கள் என்கிறாரா? அப்படியானால் அது திராவிடக்கொள்கையின் கீழ் வராதே?. அப்புறம் எதற்கு கட்சியின் பெயரில் திராவிடம் என்பதை வைத்திருக்கிறார்?. ஒருதெளிவு இல்லையே.

பெரும் குழப்பவாதியாக இருக்கும் விஜய்காந்திடம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும் தெளிவான நிலை இல்லை.இப்படி குழப்பமாக இருந்து கொண்டு அரசியல் நடத்த டியாது, அவரால் அரசியலில் பெரிய அளவில்தேறிவிட முடியாது.

ஜெயலலிதாவுக்கு ஒரு அமெரிக்க அமைப்பு அமைதி விருது கொடுத்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2004ம்ஆண்டு அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, யார் இவர்களை இயக்குகிறார்கள் என்பதில் சந்தேகம் எழுந்ததால்அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பிடமிருந்து ஜெயலலிதா விருது பெற்றுள்ளார்.

இந்திய மக்களை மதமாற்றம் செய்ய உலகளவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மும்முரமாக உள்ளன. சமீபத்தில்ஒரு கிறிஸ்தவ அமைப்பு சோனியாவுக்கு நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்துள்ளது.

100 மில்லியன் மக்களை மதமாற்றம் செய்ய இந்த கிறிஸ்தவ அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அதன் ஒருநடவடிக்கைதான் சோனியாவுக்கு நோபல் விருது தர சிபாரிசு செய்துள்ளனர்.

கருணாநிதி விரைவில் சாமியாராகி விடுவார். காரணம், முன்பு மஞ்சள் துண்டு அணிந்தார். இப்போது யோகாசனம்கற்றுக் கொள்கிறார். ராமனை எதிர்ப்பதற்காக அவரையே நினைத்துக் கொண்டிருந்த ராவணன் போல, கடவுளைத்திட்டி வந்த கருணாநிதியும் ஆன்மீகவாதியாக மாறுவார் என்றார் சுவாமி.

அய்யோ சாமி....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+