சுனாமியில் இறந்த சிறுமியின் எலும்புக் கூடு மீட்பு
சென்னை:
கடந்த டிசம்பர் மாதம் சுனாமி அலைத் தாக்குதலில் பலியான சிறுமியின் எலும்புக் கூடு 10 மாதங்களுக்குப் பிறகுசென்னையில் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளை கடந்த ஆண்டு சுனாமி அலைகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதில்ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.இந்த சுனாமி அலை தாக்குதலில் சிக்கியவர்களில் சென்னை புது வண்ணாரப்பேட்டை, மீனவர் குடியிருப்பைசேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீடும் ஒன்று.
கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட ஆறுமுகம், அவரது மனைவி சுமதி, 3 மகன்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஆனால் மகள் அனுஷியா (வயது 8) மட்டும் மீட்கப்படவில்லை.
அனுஷியா என்ன ஆனாள் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அனுஷியா காணாமல் போனது தொடர்பாககாசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் காசிமேடு துறைமுக கடலோரத்தில், முருகேசன் என்பவர் சுனாமியால் சேதமடைந்து கடந்த 10மாதங்களாக கரையிலேயே கிடந்த படகை சீர்படுத்துவதற்காக சென்றார்.
அப்போது படகுக்கு கீழே ஒரு எலும்புக் கூடு கிடப்பதைப் பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த எலும்புக் கூடு சிறுவர்களின்உடல் அமைப்பைக் கொண்டிருந்ததால், காணாமல் போன சிறுவர், சிறுமியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அனுஷியா குறித்து விவரம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு எலும்புகூட்டின் மீது இருந்த உடைகளை வைத்து அடையாளம் காட்ட கூறினர்.
இதைப் பார்த்த சுமதி, தனது மகளின் உடைதான் அது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து எலும்புக் கூட்டை பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸார்அனுப்பி வைத்தனர்.
அது அனுஷியாவின் எலும்புக் கூடுதான் என்பது உறுதியானால் எலும்புக் கூடு அனுஷியாவின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications