21ம் தேதி கருணாநிதி டெல்லி பயணம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வரும் 21ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய கட்சியாக திமுக விளங்குகிறது.முக்கியத் துறைகளுடன் கூடிய மத்திய அமைச்சர்களை கையில் வைத்துள்ள திமுகவுக்கு காங்கிரஸ்கூட்டணியில் நல்ல மரியாதை உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கருணாநிதி கலந்துகொண்டார். மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு அவர் டெல்லி சென்றது அதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் வருகிற 21ம் தேதி டெல்லி செல்லவுள்ளார். தனது டெல்லி விஜயத்தின்போது,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கருணாநிதி சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அவர் வைப்பார் என்று தெரிகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மத்தியஅரசு அளித்து வரும் நிதியுதவியை மாநில அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குறித்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிகைகளை அவர் மன்மோகன் சிங்கிடம் முன் வைப்பார் எனத்தெரிகிறது.
இளைஞர் அணி வெள்ளி விழாவுக்கு வாழ்த்து:
இதற்கிடையே திமுக இளைஞரணியின் வெள்ளி விழாவையொட்டி கருணாநிதி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 1980ம் ஆண்டு ஜூலை மாதம் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியைநான் தொடங்கி வைத்தேன். செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
அன்று தொடங்கி இன்று 25வது ஆண்டைத் தொட்டு சாதனை நடை போட்டு வருகிறது இளைஞர் அணி. 1992ம் ஆண்டு மார்ச் மாதம் விலைவாசி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டது முதல் பல்வேறு சாதனைகளைசெய்துள்ளது இளைஞர் அணி.
2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தை இளைஞர் அணி மேற்கொண்டது. போராட்டத்திற்கு முன்பாகவே10,000 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டு 65,000 பேரும் கைதாகினர்.
இந்த ஆண்டு மட்டும் இளைஞர் அணியில் புதிதாதக 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகியுள்ளனர். மேலும் 4 லட்சம் பேர் உறுப்பினராக கோரிவிண்ணப்பித்துள்ளனர். இது கழகத்தினரை தலை நிமிரச் செய்யும் தகவலாகும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications