குஷ்பு சவால் விடுகிறாரா?: விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை
சென்னை:
பெண்களின் கற்பு குறித்து கருத்து தெவித்ததற்காக நடிகை குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை தொடர்போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பாவலன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையாவதுதமிழகத்தில் பெரும்பான்மை, மக்கள் பலம், அரசியல் பலம் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இணைந்து, தமிழக பெண்களைஇழிவுபடுத்தி ஒழுக்கக் கேடான கருத்துக்களை பரப்பிய நடிகை குஷ்பு பெண்கள் இயக்கத்திடம் பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதை ஏற்று இதுவரை குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை. குஷ்பு எந்த தைரியத்தில் இருக்கிறார் என்றுதெரியவில்லை.
ஒரு வேளை மன்னிப்பு கேட்க முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகிறாரா? என்று தெரியவில்லை. அப்படிஅவர் பகிரங்கமாக சவால் விட்டால், அதை நாங்கள் சந்திக்க தயார்.
எந்தவித நிபந்தனையும் இன்றி இயக்குநர் தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு அழைத்து நடிகை மனோரமா காலில்விழ வைத்து தமிழனை அவமானப்படுத்தினார்கள்.
நாங்கள் அது போல யாருடைய காலிலும் குஷ்பு பகிரங்கமாக விழ வேண்டும் என்று கூறவில்லை.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பொதுமக்களும், வழக்கறிஞர்களும், சமூக சேவை அமைப்புகளும்கண்டனம் தெரிவித்து போராடிய நிலையிலும், இதுவரை குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தமிழகமக்களை பகைத்து கொண்டதற்கு சமமாகும்.
எனவே தமிழக மக்களிடையே நல்லுறவை வளர்த்து கொள்ள வேண்டுமானால், மெளனத்தை கலைத்து விட்டுதமிழக மக்களிடமும், இரு பெரும் தலைவர்களுக்கும் மதிப்பளித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவருக்கு எதிராக மாபெரும் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications