பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு ரூ. 9 கோடி வருமானம்
திருப்பதி:
திருப்பதியில் நடந்த 9 நாள் பிரம்மோற்சவ விழாவில் ரூ. 9 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. இந்தவிழாவில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவம் முடிந்ததும் கோவில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி நாராயண சர்மா கூறியதாவது
பிரம்மோற்சவ விழாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். 9நாட்களில் 4.71 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 3.53 லட்சம் பேர் தரிசனம்செய்தனர்.
திருப்பதி கோவில் வரலாற்றில் வருமானத்திலும் இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளது. இதில் உண்டியல்வருமானம் மூலம் ரூ. 6.34 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 1.49 கோடியும், லட்டு விற்பனை மூலம்ரூ. 81.06 லட்சமும் கிடைத்துள்ளது.
நித்திய அன்னதான திட்டத்தின் கீழ் 3.88 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர வரிசையில் காத்திருந்த பக்கதர்களுக்கு 2.27 லட்சம் உணவு பொட்டலங்கள் இலவசமாகவழங்கப்பட்டது. கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 115 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்குகாத்திருக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications