• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பையில் முரளி தியோரா பாதுகாப்பில் கராத்தே?

By Staff
|

சென்னை:

கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்ததற்கு கிடைத்துள்ள பரிசுதான் கட்சியிலிருந்து நான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுஎன்று சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை நகரில் விளம்பரப் பலகைகள் வைப்பதில் நடந்த முறைகேடுகள், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களைஅபகரித்தது உள்ளிட்ட சில சர்ச்சைகள் தொடர்பாக கைது செய்யப்படவுள்ளார் கராத்தே.

போயஸ் தோட்டத்தின் கோபத்துக்கு ஆளான காரணத்தால் அவர் தொடர்பாக போலீசார் தோண்டியெடுத்த காரணங்கள் தான்இவை. ஏற்கனவே கராத்தே ஒரு மகா பிராடு என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் போலீசுக்கு மட்டும் அது தெரியாமல்இருந்து வந்தது. இப்போது போயஸ் தோட்ட அதிருப்தி காரணமாக கராத்தே திடீரென கெட்டவராகிவிட்டார்.

தன்னைக் கைது செய்ய அதிமுக தலைமை முயல்வதை போயஸ் தோட்டத்தின் மகா சக்தி பெற்றவர்கள் மூலம் அறிந்த கராத்தேஎஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது அவர் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரின் உதவியுடன் மகாராஷ்டிரத்தின் காங்கிரஸ்புள்ளியான முரளி தியோராவின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமைக்கு மிக மிக நெருக்கமானவர் தியோரா. அவர் மூலமாக எப்படியாவது காங்கிரஸில் ஐக்கியமாகக்காத்திருக்கிறார். தனக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாவிட்டால் தனது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் என கராத்தே அஞ்சுவதாகஅவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில், கராத்தே தியாகராஜனை கட்சியை விட்டு தூக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் மாநகராட்சி மன்றம்கலைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி விதிப்படி மன்றக் கலைப்பு குறித்து மேயர், துணை மேயர்,ஆணையருக்கு 1 மாதத்துக்கு முன்பே அரசு கடிதம் எழுத வேண்டுமாம்.

மேலும் இந்தக் கலைப்பை எதிர்த்து கராத்தே நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கவும் முடியும் என்பதால் மன்றத்தை சிக்கலில்லாமல்கலைப்பது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் கராத்தேவை துணை மேயர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு அதற்கு புதிதாக தேர்தல் நடத்தும் தெம்புஅதிமுகவிடம் இல்லை. காரணம், பல அதிமுக கவுன்சிலர்களே காலை வாரி விடக் கூடும் என்ற பயம் தான்.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுடன் இந்த அதிருப்தி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டணி போட்டால் துணை மேயர்பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மண்ணைக் கவ்வும் நிலை உள்ளது. இதனால் புதிய தேர்தல் என்ற திட்டமேஅதிமுகவிடம் இல்லை.

இந் நிலையில் தன்னை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கராத்தே. இது தொடர்பாக யுஎன்ஐ செய்திநிறுவனத்திற்கு கராத்தே தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில்,

கட்சிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நான் விசுவாசமாக இருந்ததற்கு பரிசாக, என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.

கட்சிக்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்பது அதிமுகவினருக்கு நன்கு தெரியும். ஆனால் எனது உழைப்பை புறக்கணித்துவிட்டார்கள். இப்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளார்கள்.

நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார்தான் முக்கியக் காரணம். என்னைப் பற்றிதவறான செய்திகளை மேலிடத்திற்குக் கொடுத்து எனக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகவே நான்நீக்கப்பட்டுள்ளேன்.

எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். விரைவில் சென்னை திரும்புவேன் என்று கூறியுள்ளார்கராத்தே. (இப்படியே எத்தனை நாள் கூறிக் கொண்டிருப்பாரே தெரியவில்லை).

இதற்கிடையே சன் டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், சென்னையில் முறைகேடாக விளம்பர போர்டுகள் வைப்பதிலும்முறைகேடுகளிலும் ஈடுபட்டது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் என்று கூறியுள்ளார் கராத்தே. இந்த கிருஷ்ணமூர்த்தி மன்னார்குடிவகையறாவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆணையர் விஜய்குமாரும் இவரும் சேர்ந்து தான் தனது வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள் என்றும் நினைக்கிறார்கராத்தே.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X