காஷ்மீர், பாகிஸ்தானில் தொடர்ந்து நில நடுக்கம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இன்று காலை 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து காஷ்மீர் மற்றும் வடக்கு பாகிஸ்தானில் அதன்பின்னதிர்வுகள் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இன்று அதிகாலை 1.08 மணிக்கு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆகபதிவாகியுள்ளது. தொடர்ந்து காலை 9.55 மணிக்கு மீண்டும் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருள்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை.

இதே போல் இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்திலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறிஅடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

கடந்த சனிக்கிழமை நிலநடுக்கத்திற்கு பிறகு பாகிஸ்தானில் 400 முறை லேசான பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 க்கு உயரக்கூடும் என்றுஅஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+