அதிரடிப்படையின் கொடுமைகள்: டெல்லியில் மலைவாழ் பெண்கள் முறையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையின்போது தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படை வீரர்களால் அடக்குமுறைக்கு ஆளாகி கொடுமைப்படுத்தப்பட்ட தமிழக மலைவாழ் பெண்கள் டெல்லியில் உள்ள தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த 1993ம் ஆண்டு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படைகளின் தீவிர நடவடிக்கைகள் தொடங்கின. இந்தகூட்டு அதிரடிப்படையினர் சத்தியமங்கலம், மேட்டூர், தாளவாடி, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட வனப் பகுதிகளில்முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கைகளின் போது பல மலைவாசி பெண்களைக் கற்பழித்தும், சித்திரவதை செய்தும், அவர்களின்கணவர்கள், சகோதரர்கள், பெற்றோர்களை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவம் தலைமையில் கமிஷன்அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இரு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியது.

விசாரணையின் அடிப்படையில் கடந்த 2003ம் ஆண்டு நீதிபதி சதாசிவம் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால்அந்த அறிக்கை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் எந்த கவனமும் காட்டாது இருந்து வந்தது.

இதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மக்கள் கண்காணிப்பு என்ற தன்னார்வு நிறுவனம், இந்திய தேசிய மகளிர்ஆணையம் ஆகியவை பாதிக்கப்பட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை டெல்லிக்கு அழைத்து வந்தது.

இவர்களுடன் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வந்த, அந்த அமைப்பினர் மனித உரிமை ஆணையதலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது அவல நிலையை நீதிபதி ஆனந்திடம் எடுத்துக் கூறி கதறி அழுதனர்.

தங்கம்மாள், பெருமாயி, முனியம்மாள், சேவா, முருகன் ஆகியோர் கூறுகையில், தங்களை அதிரடிப்படையினர்நிர்வாணமாக நிறுத்தி வைத்து மின்சார ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தினர்.

குடிக்க தண்ணீர் கேட்டால் சிறுநீரை பிடித்துக் கொடுத்து சித்திரவதை செய்ததாக கூறியபோது நீதிபதி அதிர்ச்சிஅடைந்தார்.

அவர்களது கோரிக்கையை கேட்ட நீதிபதி ஆனந்த், இதுதொடர்பாக வருகிற 19ம் தேதி விசாரணை நடைபெறும்என உறுதியளித்தார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் உயிர் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+