தேவர் குருபூஜை: கார்த்திக் பயத்தில் ஜெயலலிதா
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைநிகழ்ச்சியின்போது, திரைப்பட நடிகர்கள் ஊர்வலமாக சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் கார்த்திக்குக்கு அந்த சமூக மக்களிடையே கிடைத்து வரும் ஆதரவைக் கண்டு மிரண்டேதமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.தேவர் குருபூஜையையொட்டி கார்த்திக் ஊர்வலமாகச் சென்று தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த இருந்தார். அதிமுகவின் முக்கியவாக்கு வங்கியான இச் சமூகத்தினரிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, சமீப காலமாக கார்த்திக்குக்கு அதிக செல்வாக்குகிடைத்து வருகிறது.
மேலும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்காந்துக்கும் தேவருக்கு அஞ்சலி செலுத்த வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வழக்கமாக இந்த நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய்காந்த், கார்த்திக்கின் வருகை கிலியைத் தந்துள்ளதாகத்தெரிகிறது.
இதையடுத்து தேவர் நினைவிடத்துக்கு நடிகர்கள் ஊர்வலமாக செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கமுதி அருகே உள்ளது பசும்பொன் கிராமம். இங்குதான் மறைந்த முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது.தேவரின் பிறந்த நாளும், நினைவு நாளும் ஒரே தினத்தில் வருவதால் இரண்டையும் இணைத்து ஆண்டுதோறும் அக்டோபர்மாதம் 30ம் தேதியை குரு பூஜை தினமாக முக்குலத்தோர் சமூகத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
குருபூஜை தினத்தன்று முக்குலத்தோர் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும், பிரகர்களும்தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
ஆண்டுதோறும் நடைபெறும் குருபூஜை விழாவை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்துவதற்காக6 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டம் சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்தது.
இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்கள், எஸ்பிக்கள்கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள், வழிகாட்டுதல்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பசும்பொன் வருவோர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் முடிவுசெய்துள்ள பாதைகள் மூலமாகத்தான் வர வேண்டும். வேறு பாதையில் செல்ல முயலக் கூடாது.
பசும்பொன் கிராமத்திற்குள் வரும் அனைத்து முக்கியச் சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். வாகனங்களில்ஆயுதங்கள், வெடிபொருட்கள், மது உள்ளிட்டவற்றைக் கொண்டு வரக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியின்போது தலித்-தேவர் சமூகத்தினர் இடையே மோதல் வெடிப்பதும் உண்டு. இதைத் தடுக்கவேமுன்னெச்சரிக்கையாக இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூடவே விஜய்காந்த் தவிர முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக், திமுகவைச் சேர்ந்த நடிகர் நெப்போலியன், நடிகர்கள்விவேக், செந்தில், அருண்பாண்டியன் உள்ளிட்டடோரும் பசும்பொன் வரவுள்ளதால் அவர்களைப் பார்க்கவும் கூட்டம் கூடும்.
அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதாவும் பசும்பொன் வரவுள்ளார். கூடவே சசிகலாவும் வருவார்.
இந் நிலையில் தான் திரைப்பட நடிகர்கள் ஊர்வலமாக வரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்கள்தங்களது ரசிகர்களுடன் வாகனங்களிலோ, நடந்தோ ஊர்வலமாக வருவதை அதிமுக தலைமை தடுத்துள்ளது.
மேலும், நடிகர்கள் நினைவிடத்திற்கு வருவதாக இருந்தால் முன் கூட்டியே வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துஅவர்களது அனுமதி கிடைத்த பின்னர்தான் தேவர் நினைவிடத்திற்கு வர வேண்டும் என்றும் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.
நடிகர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முழு அதிகாரம் வருவாய்த்துறையினருக்கு மட்டுமே உள்ளதாகவும், அனுமதிகிடைக்காத பட்சத்தில் அவர்கள் நினைவிடம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் திடீர் தடை விஜயகாந்த், கார்த்திக்கை மனதில் கொண்டுதான் எடுக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
குறிப்பாக கார்த்திக், தேவர் பூஜை தினத்தன்று தனது புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடும் என்பதால்,தேவர் குருபூஜை அவருக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் திடீர் தடையை தமிழக அரசுவிதித்துள்ளதாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications