வீரப்பன் நினைவு தினம்: முத்துலட்சுமியின் புதிய இயக்கம்- தொடங்கி வைக்கும் பழ.நெடுமாறன்
மேட்டூர்:
வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளான 18ம் தேதி தனது புதிய இயக்கத்தை வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி தொடங்குகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்த அமைப்பை தொடங்கிவைக்கிறார்.
தர்மபுரி அருகே பாடி கிராமத்தில் வைத்து கடந்த ஆண்டு 18ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழகஅதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவனோடு, நெருங்கிய கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.வீரப்பன் கொல்லப்பட்டு சில மாதங்கள் அமைதியாக இருந்து வந்த அவனது மனைவி முத்துலட்சுமி,அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்காக புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கப் போவதாகஅறிவித்தார்.
இதை தொடர்ந்து மேட்டூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களை வீடு வீடாகசந்தித்து தனது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 18ம் தேதி வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளன்று தனது இயக்கத்தைதொடங்குகிறார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமியின் சொந்த ஊரும், வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட ஊருமான முலக்காடு பகுதியில் தொடக்க விழாநடைபெறுகிறது. இதற்கு முத்துலட்சுமி தலைமை தாங்குகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன், இயக்குநர் வி.சேகரின் சகோதரர்பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே முத்துலட்சுமி தொடங்கும் இயக்கத்திற்கு தடா தங்கவேல் என்பவர் தலைமையில் திரண்டுள்ள ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரப்பனுக்கு உதவப் போய் அதிரடிப்படையினரால் பல்வேறுகொடுமைகளுக்கு ஆளானவர்கள் இவர்கள்.
முத்துலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 18ம் தேதி கொளத்தூர் பஸ் நிலையம் முன்பு தடா தங்கவேல்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
வீரப்பன் நினைவு தினம், முத்துலட்சுமியின் இயக்கத் தொடக்க விழா, தடா தங்கவேலின் போராட்டம்ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications