விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆரா? நடிகர் தியாகு டென்ஷன்
கோவை:
விஜயகாந்த், தன்னைத் தானே கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. அவர் நடத்தும் நாடகத்தைமக்கள் ஏற்க மாட்டார்கள் என்று திமுகவைச் சேர்ந்த நடிகர் தியாகு ஆவேசமாக கூறியுள்ளார்.
கருணாநிதியின் கதை, வசனம், பாடலில் உருவாகி வரும் படம் பாசக்கிளிகள். இதன் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வந்த தியாகுகூறுகையில், விஜயகாந்த் எதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். விஜயகாந்த்தின் ஆசைஒருபோதும் ஈடேறாது.அவர் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொள்கிறார். கேட்டால், ரசிகர்கள்தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள்,பார்க்கிறார்கள் என்று கதை விடுகிறார்.
எம்.ஜி.ஆரின் திறமையில் ஒரு பகுதி கூட விஜயகாந்த்திடம் கிடையாது, சமூக அக்கறையும் துளி கூட கிடையாது.
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து இதுவரை ஒரு தடவையாவது விஜயகாந்த்கவலைப்பட்டிருப்பாரா?
அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே நாளில் பதவியிலிருந்து விரட்டப்பட்டனர். அப்போது ஏதாவது பேசினாரா அவர்?சாலைப் பணியாளர்கள் 10,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வீதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகஇவர் கவலைப்பட்டிருப்பாரா?
இப்படி சமூகப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் இவ்வளவு நாளும் இருந்து விட்டு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில்,லஞ்சத்தை ஒழிப்பேன், ஊழலை அழிப்பேன் என்று வசனம் பேசிக் கொண்டு திடீரென கட்சி ஆரம்பித்துள்ளார்.
முதல்வர் பதவியைப் பிடித்து விட வேண்டும் என்று எண்ணத்தில் திரிகிறார். ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள்விஜயகாந்த் நடத்தும் நாடகத்தைப் பார்த்து ஏமாந்து விட மாட்டார்கள்.
சரி, கட்சி ஆரம்பித்தார். அதன் கொள்கை என்ன என்பதை தெளிவாகச் சொன்னாரா என்றால் அதுவும் இல்லை. அவர் பேசியபேச்சில் ஒரு தெளிவு இல்லை, இலக்கு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தனது 82வது வயதிலும் மிகத் தெளிவாக இருக்கிறார், அவரது கொள்கைகள்,போராட்டங்கள், உழைப்பு மக்களுக்காக, மக்களை மனதில வைத்துத்தான். அப்படிப்பட்ட தலைவரை மக்கள் நினைப்பார்களாஅல்லது குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்க முயலும் விஜயகாந்த்தை நினைப்பார்களா?
விஜயகாந்த் ஒரு மின் மினிப் பூச்சி மாதிரி. அவரால் எதையும் சாதிக்க முடியாது, அரசியலில் அவர் தேறவும் முடியாது என்றுஆவேசமாக கூறியுள்ளார் தியாகு.












Click it and Unblock the Notifications