சீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீன விஞ்ஞானிகள் 2 பேர் விண்வெளியில் தங்களது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பத்திரமாக தரைஇறங்கினர்.
சீனாவின் சென்ஜோ-6 என்ற விண்கலத்தில் ஃபி ஜூன்லாங், நை ஹைஸ்ஹெங் ஆகிய இரு வீரர்கள் விண்வெளிக்குஅனுப்பப்பட்டனர். இருவரும் தங்களது 5 நாள் விண்வெளி ஆய்வுகளை முடித்து கொண்டு மங்கோலியாவில்இன்று பத்திரமாக தரையிறங்கினர்.இருவருக்கும் மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
2வது முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றி கண்டதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய3வது நாடு என்ற பெருமையை சீனா பிடித்துள்ளது.
வரும் 2007ம் ஆண்டில் மீண்டும் வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது சீனா. அப்போது அந்தவீரர்கள் விண்ணில் நடக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications