முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: பரிசீலிக்கத் தயார்- ஜெ அந்தர் பல்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம், அது பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இல்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுகவின் 34வது ஆண்டு தினத்தையொட்டி செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. அவர் பேசுகையில்,

மத்திய அமைச்சர் அன்புமணி, தனது அமைச்சரகத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய நிதியில் ரூ. 57 கோடியை மோசடிசெய்து விட்டதாக ஒரு வாரப் பத்திரிக்கையில் (குமுதம் ரிப்போர்டர்) செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாமகவினர் ஒட்டுமொத்தமாக சட்டத்தைத் தங்களது கையில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகைஅலுவலகம் முன்பு கூடி வன்றையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் முறையற்றது.

என்னைப் பற்றியும், எனது அமைச்சர்களைப் பற்றியும், எனக்கு நெருக்கமானவர்களைப் பற்றியும் கூடத்தான் அதிக அளவில்பத்திரிக்கைகள், நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுகின்றன. தவறான, அவதூறான, அபாண்டமான செய்திகளை, தகவல்களை,குற்றச் சாட்டுக்களை அவை வெளியிடுகின்றன.

இதற்காக நான் அதிமுகவினரைத் தூண்டி விட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூறியதில்லை, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டதில்லை. இதை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.

சட்டரீதியாக அவற்றை அணுகுகிறோம், தேவைப்பட்டால் சில சமயங்களில் வழக்குப் போடுகிறோம். அவ்வளவுதானே தவிரசட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுமாறு நான் எப்போதுமே அதிமுகவினரைத் தூண்டியதில்லை.

பொது வாழ்க்கைக்கு வந்து விட்டாலே பொறுமை வேண்டும், சகிப்புத் தன்மை வேண்டும். இது பாமக தலைமைக்கு இல்லைஎன்பது தெளிவாகிறது.

சட்டத்தைத் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்றையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தனது கடமையை செய்யத்தான்செய்யும். காவல்துறை கடமையை செய்யத்தான் செய்வார்கள்.

அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு குறித்து பரிசீலிக்கிறேன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. முடிந்த பின்னர் பரிசீலிப்போம். (ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதை கண்டித்து சமீபத்தில் அறிக்கை விட்டார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திமுக தலைவர் கருணாநிதிமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தலை மனதில் வைத்து இந்தவிஷயத்திலும் குட்டிக் கரணம் போட்டுள்ளார் ஜெயலலிதா.)

மக்களுடன் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் வலுவாகவே உள்ளது. எங்களது கட்சியுடன், புதிய கட்சிகளை சேர்க்கநாங்கள் முயலவில்லை. ஆனால் வேறு சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேர முயலுகின்றன.

தேர்தலுக்காக தனியாக தயாராக வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாங்கள் தேர்தலை சந்திக்கத் தயாராகத்தான்இருக்கிறோம். தேர்தல் எப்போது வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.

கடந்த நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். பொருளாதார சீர்திருத்தம், நிதி நிலைசீரமைப்பு என பல சாதனைகளைக் கூறலாம்.

இதன் காரணமாக தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகத்துள்ளது (!!!!). நோக்கியா போன்ற உலகளவிலான நிறுவனங்கள்சென்னையில் தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளன.

நாட்டிலேயே இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பேருந்துக்கட்டணம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

தடையற்ற மின்சாரத்தையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இவையெல்லாம் எங்களது அரசின் சாதனைகள்.தமிழ்ப் பெண்களின் கற்பு நிலை குறித்து நிடிகை குஷ்பு தெரிவித்து கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதுபோன்றுகருத்து தெரிவிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

கராத்தே தியாகராஜன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து கூற ஏதுமில்லை.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களது ஓய்வு பெறும் வயதைஅதிகரிக்கும் எண்ணம் அரசிடம் இப்போது இல்லை என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+