அஸ்ஸாமில் 22 பழங்குடியினர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
திபு (அஸ்ஸாம்):
அஸ்ஸாமில் காப்ரி இனத்தைச் சேர்ந்த 22 பழங்குடியினரை திமசா இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர். இதில்8 பேர் பெண்களாவர்.
கடந்த மாதத்தில் இருந்து இந்த இரு இன பழங்குடியினருக்கும் இடையிலான மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த மோதலில்இதுவரை 57 பேர் இரு தரப்பிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந் நிலையில் இன்று இன்று காப்ரி அங்கோங் மலைப் பகுதியில் சென்ற 2 பஸ்களை வழி மறித்த திமசா இன தீவிரவாதிகள்,அதில் இருந்த காப்ரி இன பழங்குடியினரை மட்டும் அடையாளம் கண்டு கொலை செய்தனர்.
பஸ்களில் வைத்தே அவர்களை கண்டந்துன்டமாக வெட்டிக் கொன்றனர். பின்னர் பஸ்களுக்கும் தீ வைத்தனர்.
இதன் மூலம் கடந்த 2 இரு மாதங்களில் கொல்லப்பட்ட பழங்குடியினரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 8 பெண்கள் உள்பட 22 பேரைக் கொலை செய்த தீவிரவாதிகள் மேலும் பலரை காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.அவர்களது நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications