வாடகை பாக்கி: வீட்டை காலி செய்ய ஜெயலட்சுமிக்கு நோட்டீசு
மதுரை:
வீட்டு வாடகை பாக்கி ரூ.60,000 இருப்பதால், உடனே வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று வீட்டின்உரிமையாளர் ஜெயலட்சுமிக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.
சிவகாசி ஜெயலட்சுமி டி.எஸ்.பி ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதிருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்துவந்தார். ஜெயலட்சுமி திருச்சி சிறையில் இருப்பதால் அவரது வீடு பூட்டியே கிடக்கிறது.
இந்த வீட்டிற்கு அவர் 2004ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி வாடகைக்கு குடி வந்தார். அப்போது 35,000ம்அட்வான்சும், மாத வாடகையாக ரூ. 3,500ம் பேசியிருந்தார்.
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் தமது வழக்கறிஞர் சரத்ராஜ் மூலம் திருச்சி சிறையிலுள்ள ஜெயலட்சுமிக்குஒரு நோட்டீசு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நீங்கள் என் வீட்டுக்கு வாடகைக்கு வந்து 17 மாதங்கள் ஆகிறது. ரூ. 25,000 மட்டும் அட்வான்சுகொடுத்துள்ளீர்கள். இது வரை ஒரு மாதம் கூட வாடகையை தரவில்லை. வாடகை பாக்கி மட்டும் ரூ. 59,500உள்ளது.
எனக்கு வீடு தேவைப்படுவதாலும், வீட்டில் மராமத்து பணிகள் செய்ய வேண்டியது உள்ளதாலும் வாடகைபாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக தங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
