கதிர்காமர் கொலை: ஆஸ்திரேலிய தமிழர் கைது
கொழும்பு:
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழரான சார்லஸ்ஞானகோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபரான சார்லஸ் (வயது 60) கடந்த வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீசார் இன்றுஅறிவித்துள்ளனர். இவர் கதிர்காமருக்கும் பரிச்சயமானவர் தான் என போலீசார் கூறுகின்றனர்.கைது செய்யப்பட்ட சார்லசுக்கு தூதரக உதவிகளை அளித்து வருவதாக ஆஸ்திரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கை அலுவலகங்கள் மீது தாக்குதல்:
இதற்கிடையே இலங்கையில் இன்று 2 முக்கிய பத்திரிக்கை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடந்தது.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் சண்டே லீடர் மற்றும் மிட் வீக் லீடர் ஆகிய பத்திரிக்கைகளின் அலுவலகங்களுக்குள்நுழைந்த கும்பல்கள் அலுவலகங்களை சூறையாடின.
மேலும் அலுவலகங்களுக்கு தீ வைக்கவும் முயற்சி நடந்தது. தாக்குதலுக்கு ஆளும் கட்சியினர் தான் காரணமாக இருக்கக் கூடும்என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை விமான நிலைய விபத்து:
இதற்கிடையே நேற்று இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு இந்தோனேஷியப் பெண் பலியானார். 2 இந்தியர்கள் படுகாயம்அடைந்துள்ளனர்.
இது குறித்து இலங்கை விமான நிலைய செய்தி தொடர்பாளர் சந்தானா டி சில்வா கூறியதாவது:
சிங்கபூரில் இருந்து இலங்கை வந்த யு.எல்.316 என்ற விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கும் போது அந்தவழியாக வந்த விமானதள வாகனம் ஒன்று வேகமாக அவர்கள் மீது மோதியது.
இதில் இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். 2 இந்தியர்கள்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 7 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விமானதள வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்றுகூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications