சிம் கார்டை விழுங்கிய குண்டுவெடிப்பு கைதி
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி,செல்போன் சிம் கார்டை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி என்பவரும் ஒருவர். திருநெல்வேலி நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக புகாரி, சித்திக் அலி, அம்ஜத் அலி ஆகிய 3 பேரையும்கோவையிலிருந்து நெல்லைக்கு போலீஸார் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக 3 பேரையும் செல்களில் இருந்து வெளியே கொண்டு வந்து சிறை வளாகத்தில் அவர்களை போலீஸார்சோதனையிட்டனர்.
அப்போது கிச்சான் புகாரி தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து திடீரென்று வாயில் போட்டு விழுங்கினார்.
இதைப் பார்த்த பதற்றமடைந்த போலீஸார், எதை விழுங்கினாய் என்று புகாரியிடம் கேட்டபோது, மாத்திரை சாப்பிட்டதாக அவர்தெரிவித்தார். ஆனால் போலீஸார் அதை நம்பவில்லை.
இதையடுத்து உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அப்போது அவர் செல்போன் சிம் கார்டை விழுங்கியிருப்பது உறுதியானது.
இச் சம்பவத்தால் மற்ற 2 கைதிகளையும் போலீசார் நெல்லைக்கு அழைத்துச் செல்லாமல் சிறையிலேயே அடைத்தனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பலர் செல்போன் வைத்துள்ளதாக முன்பே புகார்கள் வந்துள்ளன. இதையடுத்துசிறையில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் அதையும் மீறி இன்னும் சிலர் செல்போன்களை பயன்படுத்தி வருவது புகாரி விவகாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறைக்குள் செல்போன்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications