மணியடிச்சா சோறு: ஆசிரியர்கள் குறித்து கால்நடை அமைச்சரின் காட்டு பேச்சு
சென்னை:
ஆசிரியர்களை சிறைக் கைதிகளுக்கு ஒப்பிட்டு அவமதித்து பேசிய கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன்,பகிரங்க மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு அமைச்சர் தாமோதரனும் மற்ற அமைச்சர்களும் இரண்டுமணி நேரம் காலதாமதமாக வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்த ஆசிரியர்கள் பலர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து எழுந்து சென்று விட்டனர்.ஆனால், அவர்களை போக விடாமல் மாணவர்களை வைத்து தடுத்தனர். ஆனாலும் பெரும்பாலான ஆசிரியை,ஆசிரியர்கள் அங்கிருந்து போய்விட்டனர்.
இதனால் அமைச்சர்கள் வந்தபோது காலி நாற்காலிகள் அவர்களைப் பார்த்து சிரித்தன.
இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் தாமோதரன் விழாவில் பேசுகையில் ஆசிரியர்களை மிகக் கேவலமாகப் பேசினார்,
ஆசிரியர்கள் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர், ஒழுக்கம் இல்லாமல் உள்ளனர், சிறைக் கைதிகளும்ஆசிரியர்களும் ஒன்று தான். இருவருக்குமே மணியடிச்சா சோறு. ஆனால், என்ன கைதிகளுக்கு சுதந்திரம் இல்லை.ஆசிரியர்களுக்கு நல்ல சுதந்திரம் உள்ளது.
சாப்பிட்ட பாத்திரத்தை மாணவர்களை விட்டு கழுவிக் கொள்கிறார்கள் என்று வாய்க்கு வந்தபடி பேசினார்தாமோதரன். தான் ஒரு அமைச்சர் என்ற நினைவே இல்லாமல், பேசுவது ஆசிரியர்களைப் பற்ற என்ற இங்கிதமும்இல்லாமல் வாய் நாறும் அளவுக்குப் பேசினார்.
அமைச்சரின் இந்த கேடுகெட்ட பேச்சுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒட்டு மொத்த ஆசிரியர் சமூதாயத்தையே அவமானப்படுத்தியுள்ள தாமோதரன் பகிரங்க மன்னிப்பு மூலம்வருத்தம் தெரிவிக்கவில்லையென்றால் அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றுஎச்சரித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications