போலீஸ் அதிகாரிகள் மீது சதுர்வேதி அவமதிப்பு வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னிடமிருந்து ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக அவதூறான தகவலைக் கூறிய இரு போலீஸ்அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார் செக்ஸ் சாமியார் சதுர்வேதி.

சென்னையில் ஆசிரமம் நடத்தி வந்த சதுர்வேதி, ஆசிரமம் வைக்க வீடு கொடுத்த தொழிலதிபர் சுரேஷின் மனைவிமற்றும் டீன் ஏஜ் வயது மகளைக் கடத்தி ஹைதராபாத்துக்கு கொண்டு போய் பாலியல் சித்திரவதை செய்ததாகபோலீஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதுர்வேதி, உதவி ஆணையர் அன்புமொழி, இன்ஸ்பெக்டர்கோவிந்தராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் சதுர்வேதி தாக்கல் செய்துள்ள மனுவில், நான் கடந்த 2004ம்ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்டேன். என் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல், ஆள் கடத்தல்உள்ளிட்ட பல்வேறு பிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க கோரி ஜாமீன் பெற மனு செய்தேன். எனக்கு ஜாமீன் வழங்குவதைகடுமையாக எதிர்த்த அரசு வழக்கறிஞர், என்னிடமிருந்து ஆபாசப் படங்களும், பெருமளவில் பணமும்கைப்பற்றப்பட்டதாக கூறினார். இதனால் எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் அன்புமொழி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் இருவரும்,பத்திரிகைகளுக்கும், டிவிகளுக்கும் அளித்த ஒரு பேட்டியில், என்னிடமிருந்து பெருமளவில் பணம்கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், யாராவது என்னிடம் ஏமாந்திருந்தால் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்களதுபணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் கூறினர். இதன் அடிப்படையில் என் மீது மேலும் சில வழக்குகளைபோலீஸார் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் என் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் வழக்குதொடர்பாக கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களையும் தாக்கல் செய்தனர், ஆனால் பணத்தை மட்டும்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

என்னிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறிமுதல் செய்திருந்தால், அதையும் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல்செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பொய் சொல்லியுள்ளனர். என்னிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகதவறான தகவலை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர்.

என்னைப் பற்றி வேண்டும் என்றே தவறான தகவல் கொடுத்து அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளஅன்புமொழி, கோவிந்தராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சதுர்வேதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+