போலி வாக்காளர்கள்: வழக்கு பதிய ஆணையம் உத்தரவு- கிலியில் அதிமுக
டெல்லி:
தமிழகத்தில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்ந்தவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் அதிமுகவினர்) மீதுவழக்குகள் பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் வாக்காளர் சேர்க்கையின்போது அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மாநிலம்முழுவதும் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்தனர்.கத்தை கத்தையாக அதிமுகவினர் வாக்காளர் விண்ணப்பங்களை அதிகாரிகள் தந்து பதிவு செய்யச் சொல்லி மிரட்டினர். வேறுவழியில்லாமல் அதிகாரிகளும் அந்தப் பெயர்களை பதிவு செய்தனர்.
ஆனால், இந்த மோசடி குறித்து தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றதையடுத்து அங்கிருந்து வந்த அதிகாரிகள்நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த மனுக்களை தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்தபோது சுமார் 13 லட்சம்பேரின் மனுக்கள் போலியானவை என்று தெரியவந்தது.
இவை அதிமுகவினரால் கத்தை கத்தையாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டவை. இறந்தவர்கள், சிறுவர், சிறுமியர்,விலாசமே இல்லாதவர்கள், ஒரே பெயரில் பல விலாசங்கள் கொடுத்து என பல்வேறு வகையிலும் போலி வாக்காளர்களைஉருவாக்கியிருந்தனர்.
இதையடுத்து இந்த 13 லட்சம் மனுக்களையும் ரத்து செய்தது தேர்தல் ஆணையம். மேலும் இந்த மனுக்களை கத்தை, கத்தையாகபதிவு செய்த அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இந்த அதிகாரி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்மீது இதுவரை அவர் திட்டவட்டமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் தவறு செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இன்று ஒரு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், போலி வாக்காளர்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது உடனடியாக அந்தந்த மாஜிஸ்திரேட்நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை வேகமாகவும் தீவிரமாகவும் நடத்தி சட்டப்பூர்வமான தண்டனைகள் கிடைக்கச் செய்யுமாறும்உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications