மழை வந்துருச்சாம்: மாநாடு இல்லையாம்..
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களின் மாநில மாநாடு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் மாநில மாநாடு வருகிற 22ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது.இந் நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 56வது மாநிலமாநாட்டில் வரும் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தார்.
தற்போது சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், 22ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு டிசம்பர் 3ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பல முக்கியமான அரசு ஊழியர் சங்கங்கள் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்போதிய கூட்டம் வருமா என்பதே சந்தேகமாக இருந்து வந்தது.
சமீபத்தில் சென்னையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கூட்டம் இல்லாமல் காலி நாற்காலிகளைப் பார்க்க நேர்ந்ததால்அமைச்சர்கள் பொன்னையனுக்கும் பாண்டுரங்கனுக்கும் முதல்வர் ஜெயலலிதா டோஸ் விட்டது நினைவிருக்கலாம்.
அதே போல டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான ஒரு விழாவிலும் முதல்வருக்கு கூட்டம் சேராமல் போனது. கூட்டம் காட்டுவதற்காகடிஜிபி அலுவலக கிளார்க்குகள், டிரைவர்கள், ஊழியர்களை வரிசை கட்டி அமர வைத்திருந்தார்கள்.
இந் நிலையில் தான் அரசு ஊழியர் மாநாடு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications