கூட்டணிக்கு மறுத்ததால் ஜெ. பழிவாங்குகிறார்: ராமதாஸ்
சென்னை:
கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்ததால் பாமகாவை ஜெயலலிதா பழிவாங்குகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பற்றி ஒரு வார இதழில் வந்த தவறான செய்தி பற்றிய விவரங்களைநீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிப்போம். தவறான செய்தி வெளியிட்ட வார பத்திரிகை மீது வழக்குதொடரவுள்ளோம்.
இது குறித்து ஜெயலலிதா அளித்த பேட்டியில் பாமகவினர் வன்முறையை தூண்டுவதாகவும், அதிமுகவினர் ஏதோமாபெரும் அகிம்சாவாதிகள் போலவும் பேசியுள்ளார். ஜெயலலிதா மீதான பிளசன்ட் ஸ்டே வழக்கில் தீர்ப்புவந்தபோது என்ன நடந்தது? (தர்மபுரியில் மாணவிகளை பஸ்சோடு எரித்தனர் அதிமுகவினர்)
ஊழல் வழக்கால் 2002ம் ஆண்டு முதல்வர் பதவியை விட்டு ஜெயலலிதா விலக நேரிட்டபோது என்ன நடந்தது?அப்போது அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? நீதிமன்ற தீர்ப்பை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக கோஷம்போடவில்லாை?
தராசு நிருபரை அலுவலகத்திலேயே புகுந்து தூக்கி போட்டு உதைத்தார்கள். மக்கள் குரல் அலுவலகத்தைஸ்தம்பிக்க வைத்தார்கள்.
கவர்னர் சென்னாரெட்டியை திண்டிவனம் அருகே ஒரு மணி நேரம் முடக்கி வைத்து கல்லை எறிந்தார்கள்,துடப்பத்தை வீசினார்கள்.
இதே போல டான்சி வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு போட்ட வக்கீல்விஜயன், சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருக்கு அதிமுகவினரால் நேர்ந்த கதி தமிழக மக்களுக்கு தெரியும்.
சிதம்பரத்தை சிவகங்கை வரை விரட்டி அடித்தார்கள். மணிசங்கர அய்யரை நாகப்பட்டணத்தில் இருந்துதுரத்தினார்கள். அவர் காரைக்காலில் தஞ்சம் புகுந்தார்.
இப்படிப்பட்ட ஜெயலலிதாவா எங்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்று பேசுவது.
கடந்த காலங்களில் பத்திரிகை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில மணிநேரங்களில் விடுதலைசெய்யப்பட்டனர். ஆனால் எங்கள் கட்சியினரை நிபந்தனையுடன் இன்று (செவ்வாய்கிழமை) காலையில் தான்விடுதலை செய்துள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் வேறு என்ன?
எங்களை மட்டும் பழிவாங்குவதன் நோக்கம் என்னவென்றால், எங்களை கூட்டணிக்கு அழைக்க முயற்சிசெய்தார்கள். நாங்கள் வர முடியாது என்று உறுதியாகக் கூறி விட்டோம். அந்த கோபத்தில் தான் பழி வாங்கும்போக்கில் ஈடுபடுகிறது அதிமுக அரசு.
காங்கிரசுடனும் கூட்டணி பற்றி பேச முயற்சி செய்கிறார்கள். யாரும் கூட்டணி அமைக்க முன் வராததால்மக்களுடன் கூட்டணி என்கிறார் ஜெயலலிதா.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications