2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் தனது 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சங்கிலியாண்ட புரத்தை சேர்ந்தவர் பொன்மணி (வயது 27). இவர் தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில்வசித்து வந்தார். இவரை கடந்த 5 வருடத்துக்கு முன்பே இவரது கணவர் விவாகாரத்து செய்துவிட்டார். இவருக்குதோல் சம்பந்தமான வியாதி இருந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இவர் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக சமயபுரம் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டுதனது குழந்தைகளுடன் புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை. இதனால் அவரது பெற்றோர் தனது மகளை தேடிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அவர்களின் வீட்டு அக்கம்பக்கத்தினர், உங்கள் வீட்டிலுள்ள அறையிலிருந்து ஏதோ துர்நாற்றம்வீசுகிறது என்று அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பிறகு அவர்களது வீட்டிலுள்ள ஒரு தனியறைஉட்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த அறையிலிருந்து தான் துர்நாற்றம் வருவதும்கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அவர்கள் போலீசின் உதவியுடன் தங்களது வீட்டில் பூட்டியிருந்த அறையின் கதவை உடைத்து பார்த்தனர்.அங்கே அவர்களது மகள் தனது 7 மற்றும் 5 வயது குழந்தையுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களது பிணத்தருகே காலி பாட்டில் ஒன்று கிடந்ததை கொண்டு, பொன்மணி குழந்தைகளுக்கும் விஷம்கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+