முத்துலட்சுமியின் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (செவ்வாய்கிழமை) வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிமலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சந்தனக் கடத்தல்வீரப்பன் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.அவனது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் புதைக்கப்பட்டது. வீரப்பன் கொல்லப்பட்டு ஒரு ஆண்டுநிறைவடைகிறது. இதையடுத்து வீரப்பன் சமாதிக்கு அவனது ஆதரவாளர்கள் ஏராளமான பேர் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்பட்டது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மலை கிராமப் பெண்களுக்காக ஒரு புதிய இயக்கம் தொடங்க அனுமதியை காவல்துறைகொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக விழா நடத்த இடம் கொடுக்கக் கூடாது என மேட்டூர், கொளத்தூர்பகுதிகளைச் சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டிவிட்டது.
எனவே வீரப்பன் சமாதிக்கு அருகிலேயே தனது புதிய அமைப்பை முத்துலட்சுமி தொடங்க திட்டமிட்டார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் இந்த புதிய அமைப்பைத் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு வெளியானது.
இதற்காக வீரப்பன் சமாதி பகுதியில் விடிய விடிய சுத்தம் செய்யப்பட்டு ஏராளமான நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன.இதை முத்துலட்சுமி மேற்பார்வையிட்டார்.
மூலக்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தற்கு மாறாக அங்கு பெரும் அமைதி நிலவியது.போலீசார் அதிகஅளவில் குவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ரகசிய போலீசார் சாதாரண உடையில் அதிக அளவில் நடமாடினர்.
சென்னை, கோவை, சேலம், பெங்களூரில் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், டிவி காமிராமேன்களும் வந்திருந்தனர்.
காலை 7.55 மணிக்கு விழா தொடங்குவதற்கு ஆயுத்தமாக வீரப்பன் சமாதி அருகே கட்டபட்டு இருந்த ரேடியாவில் வெற்றி மீதுவெற்றி வந்து நம்ச்ை சேரும் என்ற எம்ஜிஆர் பாடல் முழங்கியது.
இதையடுத்து அந்த பகுதியில் ஆங்காங்கே இருந்தவர்கள் சமாதி நோக்கி வந்தனர். காலை 11.30 மணி அளவில் முத்துலட்சுமிதனது குழந்தைகளுடன் வந்து வீரப்பன் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற புதியஅமைப்பையும் தொடங்கினார்.
வீரப்பன் ஆதரவாளார்கள் போலீஸ் கண்காணிப்புக்கு பயந்து சமாதி பக்கமே வரவில்லை.
2,000 பேருக்கு கூட்டம் சேரும் என்று எதிர்பார்த்து தயார் செய்யப்பட்டிருந்த வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட ஆள் இல்லை.
இதற்கிடையே சேலம் நகரில் வித்தியாசமாக, இன்று வீரப்பன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வீரப்பன்படத்துடன் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் சேலத்தில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் செல்போன்களில் பரவின.
மேலும் கடந்த ஆண்டில் இதே தினத்தில் இறந்த வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உங்கள் செல்போனை 2 நிமிடம் ஆப்செய்துவிடுங்கள் என்றும் அந்த மெஸேஜில் கோரிக்கை வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications