பாஜகவுடன் கூட்டணி: விஜய்காந்த் முடிவு?
சென்னை:
தனியாக நின்றால் போணியாக முடியாது என்று பல்வேறு தரப்பினரும் யோசனை தெரிவித்துள்ளதால் சின்னச் சின்னக் கட்சிகளைகூட்டு சேர்த்துக் கொண்டு வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், ஆரம்பத்திலிருந்தேயாருடனும் கூட்டு சேர மாட்டோம் என்று கூறி வந்தார்.ஆனால் விஜயகாந்த் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஈரோடு வி.சி.சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம்பேசுகையில், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என்று தடாலடியாககூறியுள்ளார்.
விஜயகாந்த் கூட்டணி வைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு பெரிய கட்சிகள் அதிமுக மற்றும் பாஜக. சந்திரகுமாரின்பேச்சைப் பார்த்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் ஜெயலலிதாவுடன்கூட்டணி வேண்டாம் என பண்ருட்டி ராமச்சந்திரனும் விஜய்காந்துக்கு அட்வைஸ் தந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதேசமயம், விஜயகாந்த்தை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பதில் பாஜகவுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்றேதெரிகிறது. காரணம், அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் தனித்து நின்று டெபாசிட் வாங்கும் சக்தி இல்லை என்பது தான்.
அதே நேரத்தில் இதை திருநாவுக்கரசர் போன்றவர்கள் ஜீரணிக்காமல் போகலாம். ஆனாலும் கட்சியின் பலத்தை மனதில் வைத்துவிஜய்காந்தையும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பதை திருநாவுக்கரசர் ஏற்கத்தான் வேண்டும்.
எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் விஜய்காந்த் கூட்டணி வைக்கலாம் என்று தெரிகிறது. அத்தோடு மேலும் சிலகுட்டிக் குட்டிக் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டு போட்டியிடும் முடிவில் விஜயகாந்த் இருப்பதாகத் தெரிகிறது.
எப்படியிருந்தாலும் தனித்து மட்டும் போட்டியிட வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விஜயகாந்த்துக்கு ஆலோசனைகள்வந்த வண்ணம் இருக்கின்றதாம். குறிப்பாக பத்திக்கையாளர் சோ, விஜயகாந்த் தனித்து நின்றால் தேற முடியாது என்றுவெளிப்படையாகவே கூறிவிட்டார்.
இதே கருத்தையே பலரும் கூறுவதால் கூட்டணி அமைக்கும் யோசனைக்கு கேப்டன் வந்து விட்டதாக அவரது கட்சியினர்கூறுகிறார்கள். விரைவில் பாஜகவுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications