சென்னையில் முகமூடி கொள்ளை: முதிய தம்பதிக்கு கத்திக் குத்து
சென்னை:
சென்னை வேளச்சேரியில் வயதான தம்பதியை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் குத்திய முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டிலிருந்தபொருட்களை அள்ளிச் சென்றனர்.
வேளச்சேரி ராமகிரி பகுதியில் வசித்து வருபவர் போத்தன் (வயது 82). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவிஅன்னா (74). இவர்களது மகள் திருமணமாகி கணவருடன் வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் வசித்து வருகிறார்.ராமகிரி பகுதி வீட்டில் போத்தனும், அன்னாவும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை கடப்பறையால் உடைத்துக் கொண்டு கொள்ளைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போத்தன் மற்றும் அன்னாவை கத்தியைக் காட்டி மிரட்டியது முகமூடி அணிந்திருந்த அக் கொள்ளைக்கும்பல். வீட்டில் உள்ள நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியது.
ஆனால் வீட்டில் நகை எதுவும் இல்லை என்று தம்பதியினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல், போத்தனையும்,அன்னாவையும் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியது. பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் திருடிச்சென்றனர்.
படுகாயமடைந்த போத்தன், அன்னா இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அன்னாவின் நிலை கவலைக்கிடமாகஇருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் துணிகர கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications