வருவாய்த்துறை அதிகாரிகளின் மெகா மோசடி: ரூ. 10 கோடி அரசு நிலம் சுவாஹா
சென்னை:
ரூ. 10 கோடி மதிப்புள்ள ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை கலெக்டர் உள்பட 6 முன்னாள்வருவாய்த்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் நிலங்களை மீட்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபடாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுபிறப்பித்துள்ளது.இதை தொடர்ந்து சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களை கணக்கெடுத்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டர் சந்திரமோகன் உத்திரவிட்டுள்ளார்.
இதற்காக சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சகாயம் தலையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் ஆய்வில் சென்னை பாடி ரெயில் நிலையம் அருகில் கொளத்தூர் 100 அடி ரோடு அருகாமையில் 2.2ஏக்கர் ஏரி உள்வாயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறுமுகம் ரெட்டியார், சீனிவாசன் என்ற தொழிலதிபர்கள் இருவரும் 19981ம் ஆண்டு முதல் இந்த நிலத்தைஆக்கிரமித்து, கடந்த 2000ம் ஆண்டு அந்த நிலத்திற்கு செட்டில்மென்ட் பட்டா வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
ஏரி நிலத்துக்கு சட்ட விரோதமாக பட்டா கொடுக்கப்பட்டது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்புகார் தரப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் இந்த நில ஆக்கிரமிப்பு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினார்.
போலீஸ் விசாரணையில், ஆக்கிரமிக்கப்பட்ட 2.2 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ. 10 கோடி என்றும், இந்தநிலத்தில் தற்போது 24 கடைகள், 7 வீடுகள் கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து நிலத்தை ஆக்கிரமித்த சீனிவாசன், ஆறுமுகம் ரெட்டியார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த நிலத்துக்கு செட்டில்மென்ட் பட்டா கொடுத்ததில் சண்முகம், வீரராகவன், அன்னப்பன், செல்வராஜ்,ஹமீத் நிசார், மற்றும் சண்முகம் ஆகிய 6 முன்னாள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செட்டில்மென்ட் பட்டா கொடுப்பதற்கு இந்த அதிகாரிகள் 6 பேருக்கும் தலா ரூ. 25,000 முதல் ரூ. 1 லட்சம் வரைபணம் கைமாறியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சண்முகம் பல்வேறுகுற்றச்சாட்டுகளில் சிக்கி அவ்வப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் துணைகலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.
இந்த மோசடி தவிர மாநிலம் முழுவதுமே வருவாய்த்துறையினரும் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுநிலங்களை சுவாஹா செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications