போலி: அதிமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை:
மொத்த மொத்தமாக போலி வாக்காளர்களை சேர்க்க கட்டுக் கட்டாக மனு அளித்தவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டது. அப்போது புதிய வாக்காளர்களாக சேர்க்கஅதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான மனுக்கள் தரப்பட்டன.இந்த மனுக்கள் அனைத்தும் போலி வாக்காளர்களின் பெயர்கள் அடங்கியவை என திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார்கொடுத்தன. இதையடுத்து அதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம்தீவிரமாக சோதனையிட்டது.
அப்போது கிட்டத்தட்ட 13 லட்சம் போலி வாக்காளர்களை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் சேர்த்ததுதெரிய வந்தது. இதையடுத்து அந்த அனைத்து மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்த போலியான வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம்கூறியிருந்தது. இதை எதிர்த்து அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரான அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
இந் நிலையில், போலி வாக்காளர்களைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையம்,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இதுவரை இந்த விஷயத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்த தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திடீரெனவிழித்தெழுந்து உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் போலியான வாக்காளர்களின் பெயர்களைக்கொடுத்தவர்கள் மீது 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
போலியான முகவரி மற்றும் தவறான முகவரியை அளித்தவர்கள், போலியான கையெழுத்துடன் மனு அளித்தவர்கள் மற்றும் 18வயதுக்குட்பட்டவர்களின் பெயர்களை சேர்த்தவர்கள் என 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்என்றார் நரேஷ் குப்தா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications