ரூ. 1 கோடியை திருப்பித் தந்த நல்லகண்ணு!!
சென்னை:
![]() |
பழம்பெரும் கம்யூனிஸத் தலைவர் நல்லகண்ணுவின் 80வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து புகழாரம் சூட்டினர்.
தமிழக அரசியல் தலைவர்களில் பெரிதும் வித்தியாசமானவர் நல்லகண்ணு. எளிமை, எளிமை, எளிமை ஒன்றுதான் இவரது தாரக மந்திரம்,நேர்மைக்கும், துணிவுக்கும் பெயர் போனவர் நல்லகண்ணு.
அனைத்து அரசியல் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அவரது 80வது பிறந்த நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டைகாமராஜர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நல்லகண்ணு எனக்கு வயதால் தம்பி. ஆனால் அனுபவத்தால், தியாகத்தால் அண்ணன். என்னை விடஇரண்டு வயது குறைந்தவர் என்பதால் அவரை வாழ்த்துகிறேன். ஆனால் அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விடமூத்தவர் என்பதால் வணங்குகிறேன்.
நல்லகண்ணு அமைதியானவர், எளிமையானவர், அடக்கமானவர். ஆனால் ஆர்த்தெழுந்தால் சிங்கம் போல, வேங்கை போல அடித்தட்டுமக்களுக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடக் கூடியவர்.
எத்தகைய சூழ்நிலையிலும், மனம் குலையாமல், நிலை குலையாமல், கொள்கையில் சிறு கீறல் கூட ஏற்படாமல் உறுதியோடு செயல்படுபவர்,அதே மன நிலையில்தான் கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார் நல்லகண்ணு.
நல்லகண்ணு வாழும் கால கட்டத்தில் நாம் வாழுகிறோம் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். அவரது இந்த வெற்றிக்கு மனைவிரஞ்சிதம் அம்மையாரும் ஒரு முக்கியக் காரணம். இருவரும் கலப்புத் திருமணம் மூலம் வாழ்க்கையில் இணைந்தவர்கள்.
நல்லகண்ணு, தனது மனைவியை ஒரே ஒரு முறைதான் சினிமாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாராம். இதிலே எனக்குநல்லகண்ணுவிடத்தில் கொஞ்சம் கோபம்தான்.
பெண் உரிமைக்காக, பாடுபடுவதாக வெளியிலே சொல்லிக் கொண்டு, இத்தனை ஆண்டு கால வாழ்க்கையிலே ஒரேயொரு முறைதான்தன்னுடைய துணைவியாரை சினிமாவிற்கு அழைத்துக் கொண்டு போனாரென்றால் அது தனது வீட்டிலே பெண்களுக்கான சுதந்திரத்தைத்தர வேண்டிய அளவிற்குத் தரவில்லை என்றுதான் பொருள்.
நான் கோள் சொல்லவில்லை, இந்த விழா நாம் எல்லோரும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய விழா, நமது குடும்பத்திலே நடைபெறுகின்றவிழா. அதிலே நாம் வேடிக்கையாகப் பேசுவது, விளையாட்டாகப் பேசுவது, சிரித்து மகிழ்வது எல்லாம் இயல்பானவை. அந்தஅடிப்படையிலே இதை சொல்கிறேன்.கணவனுக்கேற்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளிலே எந்த அளவிற்கு ஆழ்ந்த பற்றும், ஆழ்ந்த நம்பிக்கையும், ஆழந்தஉறுதியும் கொண்டு கணவர் பாடுபட்டாரோ, பாடுபட்டுக் கொண்டிருக்கிறாரோ, அதற்கேற்ற வாழ்க்கைத் துணை நலமாக ரஞ்சிதம்அம்மையார் அமைந்திருக்கிறார். இருவரையம் சேர்த்து வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.
விழாவில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச்சேர்ந்த காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நல்லகண்ணுவை வாழ்த்தினர்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லகண்ணுவை வாழ்த்தினர். அரசியல் மாச்சயரிமின்றி,அனைத்துத் தரப்பினரும் வந்து நல்லகண்ணுவை வாழ்த்திச் சென்றது விழாவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டியது.
விழாவில் நல்லகண்ணுவுக்கு, தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் புதிய கார் வழங்கப்பட்டது. இந்த காரின் சாவியை கருணாநிதி,நல்லகண்ணுவிடம் வழங்கினார். (இந்தக் காரை வாங்க நல்லகண்ணு தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரை பலதரப்பினரும் நெருக்கியதன் காரணமாக ஏற்க முன் வந்தார்)
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நல்லகண்ணுவின் 60 ஆண்டு கால கட்சிப் பணியைப் பாராட்டி ரூ. 1 கோடி வசூலித்துவழங்கப்பட்டது. ஆனால் அந்த நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஆத்மா, நல்லகண்ணுவும் ஒரு மகாத்மா தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications