மாமூல்: முன்னாள் ராணுவ வீரரை சுட்ட காக்கி
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே முன்னாள் ராணுவ வீரருடன் ஏற்பட்ட தகராறில் அவரை போலீஸ்காரர் துப்பாக்கியால்சுட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் சேவா மகளிர் மன்ற பால் உற்பத்தி சங்கத்தின் உள்ளது.இந்தச் சங்கத்தில் வரதராஜன் (வயது 45) என்பவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர்ஆவார்.
இவர் வழக்கம் போல் அதிகாலை ஆட்டோவில் சென்று சுற்றுவட்டாரத்தில் பால் சேகரித்துக் கொண்டு மாசார்பட்டிபோலீஸ் நிலையம் வழியாக சென்ற போது அங்கு காவலுக்கு நின்ற பாரா போலீஸ்காரர் (வயது 38) என்பவர்ஆட்டோவை வழி மறித்தார்.
ஆட்டோவில் ரியர் வியூ கண்ணாடி இல்லை என்று கூறி வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்.
வண்டியை ரிலீஸ் செய்ய அந்த போலீஸ்காரர் மாமூல் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வரதராஜனுக்கும்போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரடைந்த போலீஸ்காரர் தனது தூப்பாக்கியால்வரதராஜனை நோக்கி சுட்டார். இதில் அவரது வயிற்றில் குண்டு பாய்ந்து குடல் சரிந்தது.
உடனே அவரை மற்ற போலீசார்கள் ஜீப்பில் ஏற்றி பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுடப்பட்டவரதராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அவரிடம் தூத்துக்குடி மாஜிஸ்ரேட்டு வாக்குமூலம் வாங்கினார்.
மேலும் தூத்துக்குடி எஸ்.பி மகேஷ்குமார் அகர்வால் சம்பவயிடத்திற்கு விரைந்து பார்வையிட்டார். பிறகு அவரதுஉத்தரவின் பேரில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் சுயம்புலிங்கம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் சுயம்புலிங்கம் பெரும் குடிகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. மாமூலுக்காக வண்டிகளை நிறுத்தி காசுவாங்குவது இவரது ரெகுலர் டூட்டிகளில் ஒன்று.
சம்பவம் நடந்தபோது போதையில் தான் இவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications