பாக், காஷ்மீர் மீண்டும் நில அதிர்வு-நிலச் சரிவு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் நேற்று நள்ளிரவிலும் இன்று காலையும் மீண்டும் பயங்கர நில அதிர்வுகள்ஏற்பட்டன.
அக்டோபர் 8ம் தேதியன்று ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில்தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.இதையடுத்து இன்று (புதன்கிழமை) மீண்டும் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட முதலாவதுநிலநடுக்கம் 2 நிமிடங்கள் வரை நீடித்தது. இது ரிக்டர் அளவில் 5.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மீண்டும் இதே ரிக்டர் அளவில் 2வது முறையாக நிலநடுக்கும் காலை 2.34 மணிக்கு ஏற்பட்டது. அதே போல் காலை8.04 மணிக்கு ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியது.
இதைத் தொடர்ந்து 4வது முறையாக 8.45 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் பொருள் சேதம் குறித்து இதுவரை ஏதும் தகவலில்லை என்று புவியியல்ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து இந்த தொடர் நிலநடுக்கங்கள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வுகளால் ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் தூசி மண்டலம்பரவியது.
இதுவரை இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த பாகிஸ்தான்அதிபர் முஷ்ரப்,
பூகம்பம் பாதித்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய காஷ்மீர்பகுதியிலிருந்து எவ்வளவு இந்தியர்கள் வந்தாலும் அவர்களுக்கு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை திறந்து விடத்தயாராக உள்ளோம்.
இந்தியா அளித்த எதையும் நாங்கள் மறுக்கவில்லை. இந்திய ராணூவத்தினர் தவிர மற்ற உதவிகள் அனைத்தையும்ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்திய ராணுவத்தினரை ஏற்றுக் கொள்வதில் உள்ள சங்கடங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை திறந்து விடுவதாக அறிவித்துள்ள முஷ்ரப்பின்யோசனையை இந்தியா வரவேற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications