எஸ்ஆர்பி வீட்டு கொள்ளை: நீதி விசாரணை கோருகிறது காங்கிரஸ்
சென்னை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் வீட்டில் நடந்த கொள்ளை குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரிகாங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தலைமறைவான கராத்தே தியாகராஜன் அரசுக்கு எதிரான ஆவணங்களை எஸ்.ஆர்.பியிடம் தந்துவிட்டுப் போய் இருக்கலாம் என்றுகருதுகிறது போயஸ் தோட்டம்.இந் நிலையில் தான் எஸ்ஆர்பியின் வீட்டில் கொள்ளை நடந்தது. ஆனால், இது கொள்ளையே இல்லை, போலீஸ் உதவியுடனும் தமிழகஅரசின் ஆசியுடனும் நடந்த தேடல் என்று எஸ்ஆர்பி குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் உள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் வீட்டில் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடி, முக்கியமான பொருட்களைதிருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து சூறையாடி விட்டு திருடிச் சென்றிருக்கிறார்கள். இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இதைக் கண்டித்தும், நீதி விசாரணை நடத்தக் கோரியும் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை காலை மெமோரியல்ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். கட்சியின் முன்னணியினர் இதில் கலந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார் வாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications